டில்லி :
ஜனவரி 15 இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுவதை தொடர்ந்து வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
இந்திய ராணுவ தினத்தில், ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டை காப்பதுடன், இயற்கை பேரிடர் மற்றும் விபத்துக்களின் போதும் மனிதநேயத்துடன் போராடுவதால் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நமது ராணுவத்தின் மீது நம்பிக்கையும், பெருமையும் கொண்டுள்ளான்.
நமது ராணுவம் எப்போதும் நமது நாட்டை முதன்மைப்படுத்துகிறது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரர்களையும் வணங்குகிறேன். இத்தகைய மதிப்பு மிக்க ஹீரோக்களை இந்தியா ஒருபோதும் மறவாது.
இவ்வாறு மோடி பதிவிட்டுள்ளார்.