பரிமலை

பரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகர ஜோதி திருவிழா நடைபெறுகிறது.

வருடா வருடம் கேரள மக்களால் மகர சங்கராந்தி என அழைக்கப்படும் பொங்கல் திருநாள் அன்று கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி திருவிழா நடைபெறுகிறது.    இதைக் காண லட்சக் கணக்கில் பக்தர்கள் கூடுவது வழக்கம்.

இந்த வருடம் இன்று மகர ஜோதி திருவிழா நடைபெற உள்ளது.     அப்போது ஐயப்ப சாமியை அலங்கரிப்பதற்காக பந்தள அரண்மனையில் இருந்து திரு ஆபரண பெட்டி கிளம்பி சபரிமலையை நோக்கி வந்துக் கொண்டு இருக்கிறது.  இன்று மாலை சுமார் 6 மணிக்கு அந்த ஆபரணங்கள் சன்னிதானத்தை வந்தடையும்.   அதன் பிறகு அந்த ஆபரணங்கள் சாமிக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

தீபாராதனை நடந்ததும் சில நிமிடங்களில் பொன்னம்பல மேட்டில் மகர நட்சத்திரம் காட்சி தரும்.   புராணப்படி அந்த மகர நட்சத்திரம் தான் மகர ஜோதி ஆகும்.   மூன்று முறை அதன் பிறகு விளக்கு ஒளி போல மலையில் மகர ஜோதி தெரியும்.   இந்த தரிசனத்துக்காக மக்கள் ஆவலுடன் காத்து உள்ளனர்.   பல பக்தர்கள் மலையில் சன்னிதானத்தைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதியிலும் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர்.

உயரமான கட்டிடத்தின் உச்சி, மரக்கிளைகள், மலைச்சரிவுகள் ஆகிய இடங்களில் ஏறி மகர ஜோதியைக் காண தடை விதித்துள்ளது.     அது தவிர பம்பைக்கு வரும் வாகனங்கள் இன்று பகல் 12 மணிமுதல் வடசேரிக்கரையில் நிறுத்தப் பட உள்ளன.   மகர விளக்கு முடிந்து மலையில் உள்ள வாகனங்கள் கீழே இறங்குவதைப் பொறுத்து வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.