டில்லி:
முகவரி அடையாள ஆவணமாக பாஸ்போர்ட்டை பயன்படுத்தக்கூடாது. அதனால், விரைவில் முகவரி பக்கமே அச்சடிக்கப்போவதில்லை என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவு துறை அமைச்சக செய்திகுறிப்பில், ‘‘பல முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் உரியவரின் பெயர், தந்தை மற்றும் தாய் பெயருடன் முகவரி அச்சிடப்பட்டு இருந்தது.
இவ்வாறு அச்சிடப்படும் முகவரியை கொண்டு பல முறைகேடுகளும், போலி பாஸ்போர்ட் தயாரிப்பதாக புகார் எழுந்தது. 3 பேர் கொண்ட குழு இந்த முடிவை பரிந்துரைத்துள்ளது. இது ஏற்கப்பட்டுள்ளது. இனி அந்த கடைசியில் முகவரி பக்கம் பாஸ்போர்ட்டில் அச்சிடப்படாது. புதுவகை பாஸ்போர்ட் அனைத்தும் நாசிக் அரசு அச்சகத்தில் அடிக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.