பல்லியா,

த்தரபிரதே மாநிலத்தில் பசுக்களை திருடிய குற்றச்சாட்டு கூறி இரண்டு தலித்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை மொட்டையடித்து, மாடு திருடர்கள் என்று போர்டு மாட்டி இந்து அமைப்பினர் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதியஜனதா ஆட்சி பதவியேற்றதில் இருந்து தலித்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. பசு பாதுகாவல்கள் என்ற பெயரில் தலித்கள் மீதும், மாடுகளை வாகனங்களில் எடுத்துச் செல்வோர்மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபதத்தில், இந்து யுவ வாகினியின் என்ற  இந்து அமைப்பினர்,உ.பி.யின் பலியா பகுதியில் 2 தலித்கள் மீது பசுக்களை திருடியதாக போலீஸ் நிலையத்தில் புகார்  கூறி  அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள்மீது  ஐபிசி பிரிவின் 379 மற்றும் 411 (திருட்டுக்கான தண்டனை) பிரிவின் கீழ்  எஃப்.ஐ.ஆர்.  போடப்பட்டுள்ளது. இரண்டு மாடுகளை அவர்கள் திருடிச்சென்றதாகவும், அதை யுவ வாகினி அமைப்பை சேர்ந்தவர்கள் தடுத்து போலீசில் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து  பிரவின் ஸ்ரீவாஸ்தா என் பெண்ணின் புகாரின் பேரில் எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பசு திருடியதாக கூறப்பட்ட இரண்டு பேரின் தலை முடி மழித்தும், கழுத்தில் டயர்களை பொருத்தியும் மற்றும் ஊதுகுழல்கள் போன்றவற்றால் சுற்றப்பட்டும், அவர்கள் கழுத்தில் நாங்கள் மாடு திருடர்கள் ( “ஹம் காய் சோர் ஹெயின்”)  என்று போர்டு மாட்டி ரஸ்ரா நகரத்தை சுற்றி வர செய்து கொடுமைப்படுத்தி உள்ளனர் யுவ வாகினி அமைப்பினர்,

இந்த சம்பவம் உ.பி.யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ராம் என்பவர் கொடுத்துள்ள புகாரில், தாழ்த்தப்பட்டோர் திட்டமிடப்பட்ட மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழ வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இதுகுறித்து கூறிய எஸ்பி அனில்குமார் சவுத்ரி, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.