திருவனந்தபுரம்:
கேரளாவில் கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்ய ரோபோ பயன்படுத்தப்படவுள்ளது.
பாதாள சாக்கடை உள்ளிட்ட கழிவுநீர் குழாய்களில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் வகையில் ‘மேன் ஹோல்’ அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக மனிதர்கள் இதில் இறங்கி சுத்தம் செய்யும் நடை முறை பின்பற்றப்படுகிறது.
மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்களில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யும் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களுக்கு எதிராக மனித நல ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதன் எதிரொலியாக இப்பணியை ரோபோ மூலம் மேற்கொள்ள கேரளா அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கேரளா நீர் ஆணையம் மற்றும் கேரளா ஸ்டார்ட் அப் மிஷன் என்ற அமைப்பும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அமைச்சர்க் முன்னிலையில் கையெழுத்தானது.
ஜென்ரோபோடிக்ஸ் தொழிநுட்பம், உபகரணங்கள் ஆகியவை இதற்கு பயன்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.