ஸ்ரீநகர்
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற 138 பாகிஸ்தான் வீரர்கள் கடந்த ஆண்டு கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் எல்லை தாண்டி வந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயல்வது தொடர்ந்து நடைபெறுகிறது. அந்த சமயங்களில் இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். ஆனால் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஊடுருவ முயல்வதை நிறுத்துவது இல்லை.
கடந்த ஆண்டு இவ்வாறு எல்லை தாண்டிய 138 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை மத்திய அரசின் உளவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் “இந்திய வீரர்கள் 28 பேர் இந்த தாக்குதலில் மரணம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 860 முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்து மீறலில் ஈடு பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் 221 அத்துமீறல்கள் மட்டுமே நடந்துள்ளன” என தெரிவித்துள்ளது.