மும்பை, 

காராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் முழு அடைப்பு என சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

மும்பையில் கடந்த வாரம் பெரும் வன்முறை நடைபெற்றதுமு. இதையடுத்து கடந்த 3ந்தேதி பந்த் நடைபெற்றது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

பந்த் நடைபெற்ற அன்று பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த நேரத்தில் பல இடங்களில் வன்முறை வெறியாட்டமும் நடந்தது.

இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (10ந்தேதி) சகல் மராத்தா சமாஜ் சங்கட்னா என்ற அமைப்பு மீண்டும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வந்தது.

இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்நிலையில், தாங்கள் எந்தவொரு முழுஅடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கவில்லை என மராத்தா அமைப்பு விளக்கம் அளித்தது.

இதையடுத்து போலீசார் சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியது குறித்து ஆய்வு செய்தனர். அதையடுத்து, மகாஷ்டிரா  சோலாப்பூர் அருகே உள்ள பாட்குல் கிராமத்தை சேர்ந்த விஷால் பிரகாஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.