சென்னை:
2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பு கூறிய பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோர் இன்று சென்னை வந்தனர். சென்னை விமானநிலையத்தில் அவர்களுக்கு திமுக.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக செயல் தலைவரும், கனிமொழியின் சகோதரருமான ஸ்டாலின் விமானநிலையத்துக்கு நேரில் சென்று இருவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

முதலில் கனிமொழிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தபோது உணர்ச்சிவசப்பட்ட கனிமொழி சகோதரர் ஸ்டாலினை ஆரத் தழுவினார். பதிலுக்கு ஸ்டாலினும் ஆரத் தழுவினார். இது அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது. இதைத் தொடர்ந்து ஆ.ராசாவும், ஸ்டாலினை கட்டித் தழுவி வாழ்த்து பெற்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Patrikai.com official YouTube Channel