சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணிக்குள் வந்தவர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டு, அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டார்கள்.

மாலை 5 மணி வரை 74.5 சதவித வாக்குகள் பதிவானது. ஆர்.கே.நகர் தொகுதி174 வாக்குச்சாவடிகளில் முழுமையாக வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. 84 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க 5 ஆயிரம் பேர் வரையில் காத்திருக்கின்றனர். இவர்களும் தற்போது வாக்களித்துவிட்டனர்.

இறுதி நிலவரப்படி 77.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியுள்ளார். மொத்தம் 1,77,074 வாக்குகள் பதிவாகியுள்ளது. இது இந்த தொகுதியில் வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு 2015ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டார். அப்போது 74 சதவீத வாக்குகள் பதிவானது.