டில்லி
பாஜக பாராளுமன்ற உறுப்பினரின் டில்லி வீட்டில் இன்று காலை தீ பிடித்து அவர் குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
டில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா சாலையில் உள்ள ஒரு இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீராமுலு வசித்து வருகிறார். இவர் பாஜக வை சேர்ந்தவர் ஆவார். இன்று காலை சுமார் 5.30 மணிக்கு அவரது வீட்டின் படுக்கையறையில் உள்ள ஒரு சோபா தீப்பிடித்துள்ளது. இதை அடுத்து தீ பரவவே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அங்கு இரு தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை அணைத்துள்ளார். இந்த தீ விபத்தில் ஸ்ரீராமுலுவின் குழந்தைகளுக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.