சென்னை,
குஜராத், இமாச்சல் சட்டமன்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் மற்றும் ஹிமாச்சல் சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.
குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில், காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
பிரதமர் மோடிக்கு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொண்டு போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.