சென்னை,

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாரதியஜனதாவுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று  6வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து  காங்கிரஸ் ஆட்சி செய்த இமாச்சலப் பிரதேசத்தையும் கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக பாஜகவினர் வெற்றிக்களிப்புடன் திகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,  மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. எனவே குஜராத்திலும் காங்கிரஸ் ஆட்சி செய்த இமாச்சலிலும் பாஜக வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துக்கள்.

பாஜகவின் இந்த வெற்றி, ஜனநாயகத்தைக் காக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

மேலும் . ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்பட வேண்டும் என்றும்,  ஆளுங்கட்சியான அதிமுகவும் தினகரன் அணியினரும் பணப்பட்டுவாடா செய்ததை ஆதாரங்களோடு தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவிடம் கூறியிருக்கிறோம்.

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்த மதுசூதனனை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.