பத்தனம்திட்டா:

பஸ் கவிழ்ந்தவிபத்தில் சங்கரன் கோவிலில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 21 பேர் படுகாயமடைந்தனர்.

 

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 21 பேர் பஸ் மூலம் கோவிலுக்கு பயணம் செய்தனர்.

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் லாகா பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக பஸ் கவிழ்ந்தது. இதில் 21 பேர் காயமடைந்தனர். அனைவரும் பத்தனம் திட்டா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.