திருப்பதி:
திருப்பதியில் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்யும் முறை நாளை முதல் 6 நாட்களுக்கு அமல்படுத்தப்படுகிறது.

இது குறித்து கோவில் தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொது தரிசனப் பிரிவில் செல்லும் பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேர தரிசனம் செய்ய முன்பதிவு செய்வதற்கு ஆதார் அவசியமாகும்.
சோதனை முறையில் அமல்படுத்தப்படும் புதிய முறையால் வரிசையில் காத்திருக்கும் நேரம் குறையும் . பக்தர்களின் ஆலோசனைப்படி இத்திட்டத்தை மேம்படுத்தி வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Patrikai.com official YouTube Channel