தஷ்வந்த்

சென்னை:

தாயைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள தஷ்வந்த்தின் நண்பர் மணிகண்டனிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் சம்பந்தம் நகர் ஸ்ரீராம் சாலையில் வசித்து வருபவர் தஷ்வந்த். சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதாக கைது செய்யப்பட்ட இவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில் தாயிடம் செலவுக்கு பணம் கேட்டு சண்டையிட்டவர், ஒரு கட்டத்தில் தாயைக் கொன்று நகைகளை எடுத்துச் சென்றுவிட்டதாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தஷ்வந்த் நகைகளை கொள்ளையடித்ததில் உதவியாக இருந்த அவரது நண்பர் மணிகண்டன் தலைமறைவாக இருந்து வந்தார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்தைச் சேர்ந்த அவரை குன்றத்தூர் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.