ஐதராபாத்,
உலக தெலுங்கு மாநாடு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. முதல்நாளில், துணை ஜனாதிபதி வெங்கைநாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் பேசிய வெங்கையா நாயுடு, தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவது அம்மா என்ற வார்த்தை என்றும், அதையடுத்து தாய்மொழி என்றும் என்று புகழாரம் சூட்டினார்.
ஐதராபாத் நகரில் உள்ள லால் பகதூர் விளையாட்டு அரங்கில் தெலுங்கானா மாநில அரசின் சார்பில் 5 நாட்கள் உலக தெலுங்கு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் குத்துவிளக்க ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து சுமார் 8 ஆயிரம் பேர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், 40 வெளிநாட்டு அறிஞர்கள் மற்றும் 400-க்கு அதிகமான வெளிநாடுவாழ் இந்தியர்கள் கலந்துகொண்டு உள்ளனர்.
இந்த மாநாட்டில் தெலுங்கு மொழியின் இலக்கியம் மற்றும் பாரம்பரிய பெருமைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன், மகாராஷ்டிர மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய வெங்கையாநாயுடு, அம்மாவுக்கு அடுத்து அதிக மகிழ்ச்சியை தருவது தாய்மொழி என்று புகழாரம் சூட்டினார். ஆசிரியர்கள் மதிக்க வேண்டிய தேவையை கோடிட்டுக் காட்டுகையில், கூகிள் ஒரு ஆசிரியரை மாற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் முதல் சந்திரசேகர் ராவ் தனது ஆசிரியரைப் பாராட்டி பேசினார். மேலும், தெலுங்கானாவில் சிறந்த தெலுங்கு மொழியும், சிறந்த கவிதைகளும் தெலுங்கானாவில் கிடைக்கின்றன. தெலங்கானாவின் இலக்கிய சுவையை உலகம் முழுவதும் அகாடமிகள் தளங்களில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
மாநாட்டையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.