கவுகாத்தி:
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை மன்மோகன்சிங்கும், நரேந்திரமோடியும் பலவீனப்படுத்திவிட்டனர் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் கடந்த 5 மாதங்களில் சுமார் 80 கோடி அளவில் கட்சிக்கு நிதியாக பாரதியஜனதா கட்சி பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்
தற்போது அசாம் வந்துள்ள அன்னா ஹசாரே அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நாடு முழுவதும் உள்ள ஊழலை ஒழிப்பதற்காக லோக்பால் மசோதாவை கொண்டு வர கடந்த 2011ம் ஆண்டு கடும்போராட்டம் நடத்தியதன் காரணமாக காங். தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது லோக்பால் மசோதா கொண்டுவர நடவடிக்கை எடுத்தது.
அதைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பாஜ அரசு லோக்பாலில் திருத்தம் கொண்டு வந்து பார்லி.யில் தாக்கல் செய்யாமல் தாமதப்படுத்திவிட்டனர்.
இதன் காரணமாக காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகனும், தற்போதைய பிரதமர் மோடியும் லோக்பால் மசோதாவை கொண்டுவரமால் பலவீனப்படுத்திவிட்டனர் என்றார்.
மேலும், தற்போதைய மோடி அரசு பெரும் தொழில் முதலாளிகளுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறது. விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை. விவசாயிகள் உற்பத்தி பொருளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
அடுத்த ஆண்டு (2018) மார்ச் 23ந்தேதி முதல் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி தான் மீண்டும் போராட்டத்தில் குதிக்க இருப்பதாக கூறிய ஹசாரே,
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா அதிக ஊழல்கள் நடைபெறும் ஆசிய நாடுகளில் பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்றும், 80 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்,.
தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ. அரசு கடந்த 5 மாதங்களில் பல்வேறு வழிகளில் ரூ. 80 ஆயிரம் கோடி நன்கொடை யாக பெற்றுள்ளது என்ற அதிர்ச்சிகர தகவலையும் கூறி உள்ளார்.