சென்னை:
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் 21 ஆயிரத்து 350 பேர் டெங்கு காயச்சலால் பாதித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ தமிழகத்தில் தான் அதிகளவு டெங்கு பாதித்துள்ளது. இங்கு மட்டும் 21 ஆயிரத்து 350 பேர் பாதித்துள்ளனர். 2014ம் ஆண்டு 2 ஆயிரத்து 804 பேரும், 2015ம் ஆண்டு 4 ஆயிரத்து 535 பேரும், 2016ம் ஆண்டு 2 ஆயிரத்து 531 பேரும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதித்துள்ளனர்.
நாடு முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 482 பேரும், கேரளாவில் 19 ஆயிரத்து 695 பேரும் டெங்குவால் பாதிக்கபட்டுள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.