தயப்பூர்

ராஜ்சமந்த் என்னும் இடத்தில் ஒரு இஸ்லாமியரைக் கொன்று எரித்தவருக்கு ஆதரவாக நடந்த ஊர்வலத்தில் கலவரம் நிகழ்ந்துள்ளது.

சமீபத்தில் ராஜஸ்தானில் உள்ள ராஜ்சமந்த் பகுதியை சேர்ந்த ஒருவரின் வீடியோ வைரலானது.    அதில் அவர் ஒரு இஸ்லாமியத் தொழிலாளியை அடித்துக் கொன்று பின் அவரை எரிப்பது போல் பதிவாகியது.    வீடியோவின் முடிவில் அந்தக் கொலையைச் செய்த ஷம்புலால் ராய்கர் “லவ் ஜிகாத் என்னும் பெயரில் பெண்களின் வாழ்க்கையைக் கெடுப்போருக்கு இதுதான் கதி” எனக் கூறுகிறார்.   (லவ் ஜிகாத் என்பது இஸ்லாமியர்கள் இந்துப் பெண்களை காதலித்து மதம் மாறச் செய்வதற்கு இந்துத்வா அமைப்புக்கள் வைத்துள்ள பெயர் ஆகும்.)

ஷம்புலால் ராய்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.  அவருடைய கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஷம்புலாலுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்து அமைப்பினர் ஒரு ஊர்வலம் நடத்தினர்.    ஊர்வலம் நடத்த ஏற்கனவே உதயப்பூரில் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.  தடைய மீறி நடந்த இந்த   ஊர்வலத்தில் கலந்துக் கொண்டவர்கள் திறந்திருந்த கடைகள், பள்ளிகள் ஆகியவற்றை மூடுமாறு கலாட்டாவில் ஈடு பட்டனர்.    சாலை நடுவில் அமர்ந்து மறியல் செய்துள்ளனர்.    தடுக்க வந்த போலீசார் மீது கற்களை வீசி காயப்படுத்தி உள்ளனர்.

பிறகு மேலும் போலிசார் அங்கு குவிக்கப்பட்டனர்.   இறுதியில் சுமார் 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   மற்றுமுள்ளவர்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இந்தக் கலவரத்தில்  உதவி போலீஸ் சுப்பிரண்ட் சுதிர் ஜோஷி உட்பட 12 போலிசார் கல் எறிந்ததில் காயம் அடைந்துள்ளனர்.