
சென்னை:
ஓசோன் குழும நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்திவருகிறது.
சென்னை, பெங்களூர், மும்பை, பானாஜி உள்ளிட்ட 11 இடங்களில் உள்ள ஓசோன் குழுமத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு தொடர்பான புகார்கள் தொடர்பாக ரெய்டு நடைபெறுவதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
Patrikai.com official YouTube Channel