மைசூரு
மைசூரு அரச குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது
தென் இந்தியாவில் புகழ்பெற்ற அரச குடும்பங்களில் ஒன்று மைசூரு அரச வம்சம். இந்த வம்சத்தின் அரசரான ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாருக்கு ஆண் வாரிசு இல்லை. எனவே அவர் மரணத்துக்குப் பின் அவர் மனைவி கடந்த 2015ஆம் வருடம் பிப்ரவரி 23ஆம் தேதி யதுவீர் என்பவரை தத்து எடுத்துக் கொண்டார். அவர் அரச குடும்பத்தின் வாரிசாக 2015ஆம் வருடம் மே மாதம் 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டார்.
யதுவீருக்கும் ராஜஸ்தானின் துர்காபூர் இளவரசி திரிஷிகா குமாரிக்கும் 2016ஆம் ஆண்டு ஜுன் 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. அறுபது வருடம் கழித்து அரச குடும்பத்துக்கு ஆண் வாரிசு பிறந்ததற்கு மைசூரு மக்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்.