நில நடுக்கம் ஏற்பட்டதும் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

டில்லி

டில்லி மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பல பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று இரவு சுமார் 8.45 மணிக்கு உத்தரகாண்டை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.  இந்த நிலநடுக்கம் டில்லி உட்பட நாட்டின் பல இடங்களில் உணரப்பட்டுள்ளது.   டேராடூனில் இருந்து கிழக்கே 121 கிமீ தூரத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக இப்போது வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.   ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் 5.5 ஆக பதிவாகி உள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி டேராடூன் பகுதியில் நிலநடுக்கம் மிகவும் லேசாக இருந்துள்ளதாகவும்,  பலரால் இந்த நிலநடுக்கம் உணரப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.    மற்ற பகுதிகளைப் பற்றி இன்னும் தகவல்கள் சரியாக வரவில்லை.