அகமதாபாத்
காங்கிரஸ் கட்சி குஜராத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குஜராத்தில் சட்டசபை தேர்தல் வரும் 9 மற்றும் 14ஆம் தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. அதையொட்டி காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு:
1. இதுவரை எந்த இட ஒதுக்கீடும் அளிக்கப்படாத மக்களுக்கு விசேஷ ஒதுக்கீடு வழங்கப்படும். இதற்காக ஏற்கனவே ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறைக்கப்பட மாட்டாது. படேல் இனத்தவர் இந்த விசேஷ ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வரப்படுவார்கள்.
2. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு தற்போதுள்ள விலையை விட ரூ. 10 குறைக்கப்படும்.
3. விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும். விவசாயிகளுக்கு 16 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும்.
4. வேலையற்ற இளைஞர்கள் மற்றும் இளைஞிகளுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை வழங்கப்படும்.
5. அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்தும் வழக்கம் நிறுத்தப்படும்
6. வீடற்ற பெண்களுக்கு சலுகை விலையில் வீடுகள் அளிக்கப்படும்.
7. பத்திரிகை மற்றும் மீடியாவில் உள்ளவர்களுக்கு சலுகை விலையில் வீடுகள் வழங்கப்படும். பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு நோய்வாய்ப்படும் போது உதவ தனி வாரியம் அமைக்கப்படும்
இவ்வாறு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.