செர்பியா

போஸ்னியாவின் மனித கசாப்புக்காரன் என அழைக்கப்படும் ரெட்கோ மிலாடிக்குக்கு  ஐ நா பன்னாட்டு நீதி மன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது

செபர்னிகாவில் நடந்த இனப் படுகொலை உலகையே நடுநடுங்க வைத்தது.  கடந்த 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த இனப் படுகொலையில் போஸ்னியாவின் அப்போதைய ஆட்சியாளர்களான செர்பிய ராணுவம் 8000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை ஒட்டு மொத்தமாக குவித்து கொடூரமாக கொன்று குவித்தது.   பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப் பட்டனர்.  இந்த இனப் படுகொலைகளின் சூத்திரதாரி ரெட்கோ மிலாடிக்.

மொத்தம் இரண்டு லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் சுமார் 50 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படும் இந்த சம்பவத்தில் ரெட்கோ மிலாடிக் ஒரு போர்க் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டர்.   அவரது குற்றத்தை உறுதி செய்த ஐ நா பன்னாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது