டில்லி:
மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் 100வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் பரவலாக கொண்டாடப்படுகிறது.

இந்த வகையில் இந்திராகாந்தியின் பேரனும், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல்காந்தி இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘உங்களது அன்பு மற்றும் மகிழ்ச்சியை நான் நினைவு கூறுகிறேன்.
நீங்கள் தான் எனது நம்பிக்கைக்குறிய அறிவுரையாளர் மற்றும் வழிகாட்டி. நீங்கள் தான் எனக்கு பலத்தை கொடுத்துள்ளீர்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel