பெய்ஜிங்:

உலக அழகியாக இந்திய மருத்துவக் கல்லூரி மாணவி மனுஷி சில்லார் தேர்வு பெற்றுள்ளார்.

2017ம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி சீனா சான்யா நகர் அரெனாமில் இன்று நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 108 பெண்கள் கலந்துகொண்டனர். இந்தியா ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வு செய்யப்ப்டடார்.

அவருக்கு 2016ம் ஆண்டு உலக அழகியான ப்யூர்டோ ரிக்கோவின் ஸ்டீபனே தெல் வாலே கிரீடம் அணிவித்து வாழ்த்தினார். ஐஸ்வர்யா ராய்க்கு பின் இந்திய பெண்ணுக்கு உலக அழகி பட்டம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]