சென்னை:
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வசித்துவந்த வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடந்தபோது, ஜெயலலிதாவின் அ அறைக்குள் நாங்கள் செல்லவில்லை என்று வருமான வரித் துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
தமிழகத்தில் மிகப்பெரிய சோதனையாக கடந்த 9-ம் தேதி முதல் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், நிறுவனங்கள் உள்பட 187 இடங்களில் 1800க்கும் மேற்பட்ட வருமான வரித் துறையினர் 5 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கோடிக்கணக்கான தங்க நகைகள், வைரங்கள், பணம் மற்றும் ஏராளமான சொத்து ஆவனங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது ஜெயலதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் மற்றும் அவர் கூறிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு ஜெ.வின் போயஸ் இல்லத்தில் சோதனை நடைபெற்றது.
சுமார் நள்ளிரவு 1.30 மணி வரை நடைபெற்ற இந்த சோதனை குறித்து வருமான வரித் துறையினர் கூறுகையில்ஜெ யலலிதாவின் செயலாளர் பூங்குன்றன் அறையில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டது. முறையான அனுமதியைப் பெற்ற பிறகே சோதனை நடத்தப்பட்டது என்று தெரிவித்தனர். மேலும், ஜெயலலிதாவின் அறையை சோதனையிடவில்லை என்றும் கூறினார்.
சோதனைக்கு பின்னர் ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமன் கூறுகையில், ஜெயலலிதா தங்கி யிருந்த அறையை சோதனை நடத்த அதிகாரிகள் கேட்டனர் , ஆனால் நாங்கள் அனுமதிக்க வில்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடித பண்டல்களையும், பென் டிரைவ், லேட்டாப் ஆகியவற்றையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டார்.