லண்டன்:
பிரிட்டனில் விமானமும்- ஹெலிகாப்டரும் நடுவானில் மோதிக் கொண்டன.

பிரிட்டனின் மத்திய மாகாணமான பக்கிங்ஹாம்ஸ்பயர் பகுதியில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு ஹெலிகாப்டர் அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 12.30 மணியளவில் மோதியது. இதனால் விமானமும், ஹெலிகாப்டரும் வேடிஸ்டன் ஆலிஸ்பரி என்ற எஸ்டேட் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது.
சம்பவ இடத்தில் விமானம், ஹெலிகாபடர் பாகங்கள் சிதறி கிடந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இச்சம்பவத்தில் அதில் பயணம் செய்த அனைவருமே உயிரிழந்திருக்க கூடும் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் எத்தவை பேர் இறந்துள்ளனர் என்ற விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
[youtube-feed feed=1]