வெள்ளை உடை அணிந்தவர் ஹம்ஸா தாலிபன்

ண்ணூர்

எஸ் தீவிரவாத இயக்கத்தில் ஆட்களை சேர்த்தமைக்காக இரு இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவிரவாத அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ எஸ்) அமைப்பு உலகெங்கும் பல பயங்கரவாத செயல்களை நிகழ்த்து வருவதும், இதற்காக பல நாடுகளில் இருந்தும் ஆட்களை தங்கள் அமைப்பில் சேர்த்து வருவதும் தெரிந்ததே.   இந்தியாவிலும் இது போல அந்த அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பவர்கள் இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி உள்ளன.   இது தொடர்பாக கேரளா போலீஸ் மூன்று நபர்களை இரண்டு தினங்கள க்கு முன்பு கைது செய்தது.

கைதானவர்கள் தெரிவித்த தகவலின் படி கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் இரு இஸ்லாமியர்களை  போலீஸ் கைது செய்துள்ளது.   அதில் ஒருவர் ஐ எஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பதில் முக்கிய புள்ளி என்பது தெரியவந்துள்ளது.  ஹம்ஸா தலச்சேரி மற்றும் ஹம்ஸா தாலிபான் என இரு பெயர்களில் உலவி வரும் இவர்  இரு வேறு பாஸ்போர்ட்டுகள் மூலம் பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

தாலிபன் தீவிரவாத குழுவில் உள்ள ஒரு தலைவரிடம் சமையல் வேலை பார்த்த ஹம்ஸா பின்பு ஐ எஸ் தீவிரவாதக் குழுவில் இணைந்துள்ளார்.   கேரளாவில் உள்ள பல இளைஞர்களை மன மாற்றம் செய்து ஐ எஸ் தீவிரவாதக் குழுவில் இணைத்து அவர்களை சிரியா, ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி பல பயங்கரவாத செயல்கள் நடத்த உதவியுள்ளார்.

இந்த விவரங்களை தெரிவித்த கண்ணூர் போலீஸ் துணை சூப்பிரண்ட் சதானந்தன் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும்,  விரைவில் இது சம்பந்தமாக வேறு யாராவது இருந்தால் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.