டில்லி:
பிரதமர் மோடிக்கு அகன்ற மார்பு இருந்தபோதும், அவருக்கு சிறிய இதயம் தான் இருக்கிறது என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறினார்.
டில்லியில் தொழில்துறை அமைப்பு சார்பில் நடந்த ஒரு கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் பேசுகையில், ‘‘ இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இது மோடியால் ஏற்பட்ட பேரழிவு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இந்தியாவின் எதிர்பார்ப்பு சிதைக்கப்பட்டது’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘அனைத்து பணமும் கறுப்பு பணம் இல்லை என்பதை மோடி மறந்துவிட்டார். மோடி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
தாஜ் மஹால் இந்தியர்களால் கட்டப்பட்டது என்ற விவாதம் காரணமாக நம்மை பார்த்து உலகமே சிரிக்கிறது. மோடிக்கு பெரிய மார்பு உள்ளது. ஆனால் இதயம் சிறியதாக உள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழிலை அரசு புறக்கணிக்கிறது. அவர்களை திருடர்களை போல் அரசு நடத்துகிறது’’ என்றார்.