டில்லி:
உயர் பதவியில் இருப்பவர்கள் மீதான சிந்தனையின் வெளிப்பாடாக தான் ராஜஸ்தான் அரசு புதிய அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள், அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மீது உரிய அனுமதி பெற்ற பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அனுமதி வழங்கப்படும் வரை குற்றம்சாட்டப்பட்ட நபரில் பெயர், விபரங்களை மீடியாக்கள் வெளியிடக் கூடாது என்ற புதிய அவசர சட்டத்தை ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்கு எதிர்கட்சிகளும், பத்திரிக்கையாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இது குறித்து கூறுகையில், ‘‘மக்கள், மீடியாக்களின் குரலை ஒடுக்கும் வகையில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டள்ளது. உயர் பதவியில் இருப்பவர்களை நினைத்து இச்சட்டத்தை ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது.
பிரபுக்களின் ஆதிக்கத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நேர்மறையான மாற்றம் வர வேண்டும் என்று தான் மக்கள் 2014ம் ஆண்டில் வாக்களித்தனர். ஆனால், இந்த பலம் தொடர்ந்து தர்கரீதியான மாற்றத்தை மேற்கொள்ள தான் பயன்படுத்தபடுகிறது’’ என்றார்.
லோக்பால் அமைக்காததற்காக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அன்னா ஹசாரே விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் ராஜஸ்தான் அரசின் அவசரசட்டம் இதற்கு நேர்மாறாக அமைந்துள்ளது.