டில்லி:
பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக ரூ. 2.11 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
பொருளாதார நிலைமை குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ கடந்த 3 ஆண்டுகளில் மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது.
பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக ரூ. 2.11 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அண்டை நாடுகளுடனான வர்த்தகத்தை மேம்படுத்த அடுத்த 5 வருடங்களில் ரூ.6.92 லட்சம் கோடி செலவில் 83 ஆயிரம் கி.மீ சாலைகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார்.