ப்கானிஸ்தான் நாட்டில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதலில் 72 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் உள்ள இரு மசூதிகளில் தற்கொலைப்படையை சேர்ந்த பயங்கரவாதிகள்  வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் 72 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களை உடடினயாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் காரணமாக மசூதியினுள் பல பகுதிகள் சேதமடைந்துள்ளதாகவும், ஆங்காங்கே ரத்தங்கள் சிதறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பயங்கர தாக்குதலை தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்தியிருலாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆனால், தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

[youtube-feed feed=1]