
டில்லி,
மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரில் செயல்பட்டு வரும் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரியின் தலைவராக பிரபல இந்தி திரைப்பட நடிகர் அனுபம் கெர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மராட்டியம் மாநிலம் புனேவில் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக்கல்லூரி உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கல்லூரியில் பயின்ற பலர் திரையுலகில் ஜொலித்துள்ளனர்.
இந்நிலையில், திரைப்பட இயக்குநர் அனுபம் கெர் அந்த பதவிக்கு இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
நடிகர் அனுபம் கெர் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel