மேட்டுர் அணை

மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்புகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் விநாடிக்கு 10,683 கனஅடியாக  இருந்த நீர்வரத்து நேற்று 10,984 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து  விவசாயத்திற்கு  விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.44 அடியாக உள்ளது. அதாவதுழ நீர் இருப்பு 57.91 டிஎம்சியாக உள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று விநாடிக்கு 11,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பரிசல் இயக்குவதற்கான தடை நீடித்து வருகிறது.