பீஜிங்

சீன தனது நாட்டின் தெற்கு பகுதியிலிருந்து 10 பில்லியன் கன மீட்டர் தண்ணீரை வடக்குப் பகுதிக்கு திசை திருப்பி சாதனை புரிந்துள்ளது.

சீனாவின் வடக்கு பகுதியில் வரட்சியும், தெற்குப்பகுதியில் நதிநீர் அதிகமாகவும் காணப்படும்.  அதனால் தெற்குப்பகுதியில் இருந்து நதி நீரை வடக்குப் பகுதிக்கு திசை திருப்ப கடந்த 1950ல் இருந்தே சீனா திட்டம் இட துவங்கியது.  பிறகு திட்டம் வடிவமைக்கப்படவே பல ஆண்டுகள் ஆயின.  இருந்தும் இந்த திட்டத்தை கொண்டு வர சீன அரசு பெரும் முயற்சியில் ஈடுபட்டது.

இந்த திட்டத்துக்கு செலவும் மிகவும் அதிகமாகும் எனினும் அரசு தனது முயற்சியைக் கைவிடவில்லை.  முதலில் நதிகளில் அணைகள் கட்டப்பட்டன.  பின்பு குழாய்கள், கால்வாய்கள் மூலம் நதிநீர் செல்ல வழி அமைக்கப்பட்டது.  மேடான இடங்களில் பம்புகள் மூலமும் சில இடங்களில் அந்த மேடான இடங்களை சமப்படுத்தியும் நதி நீர் செல்லும் பாதை உருவானது.

கடந்த 2014 ஆம் வருடக் கடைசியில் நீர் வரத்து வர ஆரம்பித்தது.  தற்போது அதன் திட்ட அளவான 10 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் அளவை எட்டி உள்ளது.  பீஜிங் நகரத்துக்கு தேவையான தண்ணீரில் 70% இந்த திட்டத்தின் மூலம் கிடைத்துள்ளது.  இதன் மூலம் 11 மில்லியன் மக்கள் பயனடந்துள்ளனர். இதற்கு முன்பு நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருந்த மக்களுக்கு தற்போது இந்த திட்டத்தின் மூலம் தண்ணீர் பஞ்சம் சிறிதும் இல்லை.

[youtube-feed feed=1]