ஸ்டாக்ஹோம் :
2017 ம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மருத்துவத்திற்கான நோபஸ் பரிசு பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 பேருக்கு சேர்ந்து பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், மருத்துவம், பொருளா தாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
2017ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களின் விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதை நோபல் பரிசுக்குழு தலைவர் தாமஸ் பெர்ல்மன் அறிவித்துள்ளார்.
‘இதில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு ஜெபி சி.ஹால், மைக்கேல் ரோஷ்பஷ், மைக்கேல் டபிள்யூ.யங் ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரினங்களின் 24 மணி நேர சுழற்சி (உயிர் கடிகாரம்) செயல்படும் முறையை (molecular mechanisms controlling the circadian rhythm)மூலக்கூறுகளின் செயல்பாடுகள் பற்றிய கண்டுபிடிப்புக்காக கண்டறிந்ததற்காக மூவரும் நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளனர்.
நோபல் பரிசு பெற்ற 3 பேருக்கும் இந்திய மதிப்பில் ரூ.7 கோடி பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.