டில்லி,

பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி தலைவராக சசி சங்கரை நியமனம் செய்ய மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.

அரசு பணியாளர்கள் நியமனத்துக்கான மத்திய அமைச்சரவை குழு (ஏசிசி) இவரது பெயரை பரிந்துரைத்துள்ளது. சசி சங்கர் தற்போது  ஓஎன்ஜிசி நிறுவனத்தில் தொழில்நுட்ப மற்றும் களப்பிரிவின் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் (ஓஎன்ஜிசி) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள சசி குமாரின்  பதவி காலம் வரும் அக்டோபர் 1ந்தேதி முதல் 2021 மார்ச் 31  வரை 4 ஆண்டுகள் ஆகும்.