சென்னை,

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள நாகை சென்ற முதல்வர் எடப்பாடி, வழியில் மயிலாடுதுறை சென்று புஷ்கரத்தில் நீராடி சென்றார்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்பட பலர் விமர்சித்து வருகின்றனர்.

டிடிவி தினகரன் கூறும்போது பொது ச்செயலாளருக்கும் செய்தது ரோகம் அவர் காவிரியில் மட்டும் அல்லராமேசுவரம், காசி என எத்தனைநதிகளில் நீராடினாலும் பாவம் போகாது. அவரும் அமைச்சர்களும் நீராடியதால் ஆற்றின்புனிததன்மைதான்கெடும். எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம் தமிழக வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றமாகும் எனகூறினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி தினகரன் இந்து மதத்தை கலங்கப்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கவிவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு, தர்மத்திற் குகிடைத்த வெற்றிஎனகூறி உள்ளார்.