டில்லி,

காவிரி நதிநீர் பங்கீடு  வழக்கு குறித்த இறுதிக்கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய விசாரணையின்போது காவிரி மேலாண்மை வாரியம் ஏன் அமைக்கவில்ல என்று மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி விடுத்தது.

காவிரி வழக்கு குறித்து  கர்நாடகா, கேரளா, தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் வாதாடிவிட்ட நிலையில் ஒத்தி வைக்கப்பட்டது.

அப்போது வழக்கு குறித்து கூறிய  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘‘காவிரி வழக்கில் தொடர்புடைய அனைத்து மாநில விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொண்டு நல்ல முடிவை எட்ட வேண்டும். 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த பிரச்சினையில் அனைத்து தரப்பினரின் வாதத்தையும் பரிசீலிக்க வேண்டும்.

இதே போல மத்திய நீர் ஆணையம், நிபுணர் குழு, நீர்வளத்துறை ஆகியவற்றின் கருத்தை கேட்க வேண்டும். எனவே, இவ்வழக்கு 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

அதைத்தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது  காவிரி வழக்கில் மத்திய அரசின் வழக்கறிஞர் இன்று தனது தரப்பு வாதத்தை முன் வைத்தார்.

அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகார முள்ளது, காவிரி நடுவர்மன்றம் ஆலோசனை மட்டும் வழங்கலாம் என்று மத்தியஅரசு வழக்கறிஞர் வாதிட்டடார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  2013ம் ஆண்டு அரசாணை வெளியிட்டும் இதுவரை நடுவர் மன்றம் அமைக்காதது ஏன் என கேள்வி எழுப்பியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்தது தவறான அணுகுமுறை என்றும்,  மேலும் இந்த பிரச்சினையில்  இரண்டு மாநிலங்களுக்கும் இடையே சுமுக தீர்வு காண மத்திய அரசு வழிவகை செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டியது.

காவிரி  நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு  வழக்கு குறித்த இறுதிக்கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.  கர்நாடகா, தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய 3 மாநிலங்களும் தாக்கல் செய்த மேல்முறை யீட்டு மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்த ஜூலை மாதம் 11–ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.