சென்னை:

மிழகத்தில்  14 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்  ஜாங்கிட், ஜே.கே.திரிபாதி, காந்திராஜன் ஆகியோர் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பொறுப்பு திரிபாதிக்கும், பெருநகர போக்குவரத்து கழக கண்காணிப்பு அதிகாரியாக ஜாங்கிட்டும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக காந்திராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சென்னை அடையாறு காவல் துணை ஆணையராக ரோகித் நாதன் ராஜகோபால், கோவை போக்குவரத்து காவல் துணை ஆணையராக சுஜித்குமார்,  சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராக சுந்தரவடிவேல், காவலர் வீட்டுவசதி தலைவராக தமிழ்ச்செல்வன். பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக சுனில்குமார் சிங், கடலோர காவல்படை டிஜிபியாக வன்னிய பெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிவில் சப்ளை சிஐடி கூடுதல் டிஜிபியாக பிரதீப் வி.பிலிப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை நீவீனமையமாக்கல் பிரிவு ஐஜியாக வினித்தேவ் வாங்கடே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஊர்க்காவல்படை கூடுதல் டிஜிபியாக கருணாசாகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.