
சென்னை,
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், பொதுக்குழு கூட்டத்துக்கு வந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைமுதல்வர் ஓபிஎஸ்-சும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தற்போது நடைபெற்று வரும் அதிமுக செயற்குகுழு, பொதுக்குழு கூட்டத்துக்கு 95 சதவிகித உறுப்பினர்கள் வந்துள்ள நிலையில் சுமார் 10.30 மணி அளவில் கூட்டம் தொடங்கியது.
முன்னதாக சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னை ஐகோர்ட்டு விதித்துள்ள உத்தரவு குறித்தும், சசிகல குடும்பத்தினர் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இறுதியாக ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel