டில்லி
அனைத்து சிம் கார்டுகளுடன் சிம் கார்டை அவசியம் இணைத்தாக வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அரசு கொண்டு வந்த ஆதார் கார்டை எதிர்த்த பா ஜ க அரசு, பின்பு அரசின் சில சலுகைகளுக்கும், மானியங்களுக்கும் மட்டுமே ஆதார் எண் தேவை என அறிவித்தது. பின்பு எரிவாயு மானிய திட்டம் உட்பட பலவற்றுக்கு ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தியது. மெல்ல மெல்ல ஒவ்வொன்றுக்கும் ஆதார் அவசியம் என அறிவிப்புக்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
இப்போது லேடஸ்டாக சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் இணைக்க வேண்டியது அவசியம் என மத்திய பா ஜ க அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கில் கடந்த ஃபிப்ரவரி மாதம் உச்ச நீதி மன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது. வரும் 2018ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதத்துக்குள் சிம் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்தாக வேண்டும் எனவும் அவ்வாறு இணைக்கப்படாத சிம் கார்டுகள் செயலிழக்க செய்யப்படும் என அறிவித்துள்ளது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இன்னும் ஆதார் எண் வாங்காத மக்கள் இன்னும் பலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.