டில்லி,

பெரா வழக்கு காரணமாக உயர்நீதி மன்ற உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் வழக்கை  3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் டிடிவிக்கு உச்சநீதி மன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூலை 21ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, டிடிவி மீதான  பெரா வழக்குகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து, விசாரணையை தினகரன் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் தற்போது, டிடிவியின் மேல்முறையீட்டு வழக்கில், பெரா வழக்கை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என மீண்டும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலா, டிடிவி தினகரன், பாஸ்கரன் ஆகியோர்மீது ஜெயா டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக  அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. 20ஆண்டுகளுக்கும் மேலாக  கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்கு, தற்போதுதான் உயிர்பெற்று விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வழக்கை மீண்டும்  இழுத்தடிக்கும் நோக்கில் டிடிவி தினகரன்  உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். ஆனால் உயர்நீதி மன்றம் வழக்கை 3 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டது.

அதை எதிர்த்து உச்சநீதி  மன்றத்தில், தம் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்குகளுக்கு தடை விதிக்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அன்னிய செலாவணி மோசடி வழக்கு களுக்குத் தடை விதிக்க அதிரடியாக மறுத்துவிட்டது. மேலும்,  பெரா வழக்கில் விசாரணையை தினகரன் எதிர்க்கொள்ள வேண்டும்  என  கடும் எச்சரிக்கை செய்துள்ளது.

மேலும்,. தினகரனின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், “இது போன்ற வழக்கு தொடர்ந்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்” என்று கடுமையாக எச்சரித்தது.

இதன் காரணமாக டிடிவி வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

[youtube-feed feed=1]