ஸ்ரீநகர்:
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் போலீசார் காயமடைந்தனர்.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் பன்டாசவுக் என்ற பகுதியில் போலீஸ் முகாம் உள்ளது. இந்த முகாம் மீது பயங்கரவாதிகள் திடீரென இன்று தாக்குதல் நடத்தினர். இதில் 5 போலீசார் காயமடைந்தனர். தகவலறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்துள்ளனர். அங்கு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் பலியானார்.
Patrikai.com official YouTube Channel