மேஷம்
குழந்தைங்களுக்கு அரசாங்கத்தால் நன்மை ஏற்படும். மருத்துவம் படிக்க விரும்பும் குழந்தைங்க விருப்பம் ஸ்வீட்டாய் நிறைவேறும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். பேச்சில் உள்ள வசீகரம் அலுவலகத்திலும் அக்கம்பக்கத்திலும் உங்கள் செல்வாக்கை உயர்த்தும். அலுவலகத்தில் பலதரப்பட்ட நிகழ்வுகள். ரெடியா இருங்க. ஜாலியாவும் சிலது இருக்கும் என்பதால் பயமெல்லாம் வேணாம். ஆரோக்யத்தை நல்லாப் பார்த்துக்கிட்டீங்கன்னா … அது உங்களை ரொம்ப நல்லாப் பார்த்துக்கும். கண்ணுக்கு அழகான வாகனம் வாங்குவீங்க.
சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 28 முதல் ஆகஸ்ட் 31 வரை
ரிஷபம்
இப்ப திருமணத்துக்கு அவசரப்பட வேண்டாமே? பொறுத்ததுதான் பொறுத்தீங்க… தேதியை மட்டும் சில மாசங்களுக்கு ஒத்திப்போடுங்க.. மற்றபடி திருமண ஏற்பாடுகள் நடக்கட்டும்/ குழந்தைங்களைப் பற்றி நீங்க பட்ட கவலையெல்லாம் ஒருவழியாக முடிந்து நிம்மதி ஏற்படும் நண்பர்கள் உங்களுக்கு அருமையாய் வழிகாட்டி உதவுவாங்க. அவங்களை தைரியமாய் நம்புங்க. வடக்கில் வீடு வாங்க விரும்பறவங்க ஆசை நிறைவேறும். (எந்த நாட்டுப் பிரஜையாய் இருந்தாலும்). டாடியிடம் சொல்லி வையுங்க… ஆரோக்யத்தை அலட்சியப் படுத்தவே கூடவே கூடாது.
சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 வரை
மிதுனம்
குழந்தைங்களைப் பற்றி நீங்க பட்ட கவலையெல்லாம் அடுப்பின் மேல் வைத்த ஐஸ் மாதிரிக் கரையும். எல்லாருக்குமே உங்களைப் பிடிக்க ஆரம்பிச்சுடும். புது வேலை கிடைக்க நிறைய சான்ஸ் இருக்கு. பேச்சில் உள்ள வசீகரம் அலுவலகத்திலும் அக்கம்பக்கத்திலும் உங்கள் செல்வாக்கை உயர்த்தும். தாறுமாறான உணவுப்பழக்கம்.. பான் பராக் என்று ஏதாவது உங்கள் ஆரோக்யத்தைக் கெடுக்கும் பழக்கம் என்றால் அதற்குப் பெரிய டாட்டா சொல்லுங்க. இப்பவே இம்மீடியட்டா சொல்லிடுங்க.
கடகம்
புது வேலை கிடைக்க நிறைய சான்ஸ் இருக்கு. நண்பர்களால பெரிய நன்மைகள் காத்திருக்கு. காத்திருந்த விஷயங்கள் பல மாசங்கள் கழித்து சந்தோஷமாய் நிறைவேறியே தீரும். கலைத்துறையில் உள்ளவங்களுக்கு புது லாபம் கிடைக்கும். யார் யாருக்கெல்லாம் உங்களைக் கண்ணாலே பிடிக்காமல் இருந்ததோ அவங்க உள்பட எல்லாருக்குமே உங்களைப் பிடிக்க ஆரம்பிச்சுடும். அவ்ளோ வசீகரம் உங்ககிட்ட கூடும். இத்தனை காலமாய் ஒளிஞ்சுபிடிச்சு விளையாடிக்கிட்டிருந்த திறமையெல்லாம், இதோ நானிருக்கேனே என்று முன்னே வந்து நிற்கும். வெளிச்சத்துக்கு வந்துட்டீங்க.
சிம்மம்
வராத பணமெல்லாம் வாசல்கதவைத் தாண்டி உங்களிடம் வரும். நல்ல முறையில் பேசி நாலு பேரைக் கவருவீங்க. பகைவர்கள் எல்லாம் பகைவர்கள் அல்ல அரசாங்கத்துக்கிட்டேயிருந்து இதோ வரும் அதோ வரும்னு காத்துக்கிட்டிருந்த குட் நியூஸெல்லாம் வந்தே வந்தாச்சு. டோன்ட் ஒர்ரி. நண்பர்கள் வெளிநாடு போவது பற்றிக் காதால் புகைவிட வேண்டாம். அவங்களால பெரிய நன்மைகள் காத்திருக்கு. காதல் கத்திரிக்காய் என்பவற்றில் இப்போதைக்குப் பெரிய ஹோப் வைக்க வேண்டாம். அததற்குக்கு காலம் வரும். ப்ளீஸ் வெயிட்.
கன்னி
ஒரு விஷயம் நல்லா நினைவு வெச்சுக்குங்க. நீங்க சொல்லுவதெல்லாம் பலிக்கும். செலவைவிட வரவு அதிகம். நீங்க சொல்லுவதெல்லாம் பலிக்கும். கணவன் மனைவிக்கிடையே பரஸ்பரம் நம்பிக்கை அதிகரிக்கும். வெளிநாட்டு லாபம் வரும். ஹப்பாடா. பெரிய பெரிய அகழிகளைத் தாண்டிட்டீங்கம்மா. காத்திருந்த விஷயங்கள் பல மாசங்கள் கழித்து சந்தோஷமாய் நிறைவேறியே தீரும். வராத பணமெல்லாம் வாசல்கதவைத் தட்டியோ தட்டாமலோ வரும். பேச்சில் அழகான நிதானம் வரும். நல்ல முறையில் பேசி நாலு பேரைக் கவருவீங்க.
துலாம்
மம்மிக்குப் புகழ் அதிகரிக்கும்,. அலுவலகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். கவர்ன்மென்ட் உத்யோகம் இதோ ரெடி. இத்தனை வராமல் ஆட்டம் காட்டிய சுபநிகழ்ச்சிகளெல்லாம் மெல்ல மெல்ல உங்களருகில் வரும். பேச்சில் சற்று ஜாக்கிரதையாய் இருக்கணும். இத்தனை காலம் வருவேனா என்று அடம்பிடித்த சுபநிகழ்ச்சிகளெல்லாம் மெல்ல மெல்ல உங்களருகில் வரும். பேச்சில் மட்டும் மிக (இதை ஒரு பத்து முறை காபி பேஸ்ட் செய்து போட்டுக்குங்க) ஜாக்கிரதையாய் இருக்கணும்மா. ஒரு முறைக்கு நாலு முறை யோசித்தே வார்த்தைகளை டெலிவரி செய்ய வேண்டும்
விருச்சிகம்
மம்மிக்கு மருத்துவ செலவு வந்தால் கலங்க வேண்டாங்க. சரியாகும். பிரச்சினையாகாது. மம்மிக்குப் கவர்ன்மென்ட் உத்யோகம் இதோ ரெடி. நண்பர்கள் கிட்ட ஒரு அளவோடு வெச்சுக்குங்க. இத்தனை காலமாய் மனசை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த விரக்தி மனப்பான்மை ஓடி ஓளியும். பொறுமையாய்த்தான் இருந்தாகணும். சமீப காலம் வரை நினைத்ததெல்லாம் நிறைவேறிக்கொண்டே வந்தன. இப்பவும் நிறைவேறும். சற்று நிதானமாய் நடக்கும். அவ்ளோதான். ஒரேயடியாய் நடக்காதோன்னு நீங்களா கற்பனை செய்துகிட்டு டென்ஷன் ஆனால் அதற்கு நான் பொறுப்பில்லை. அருமையான நல்ல செலவுகள் மனதை நிறைத்து மகிழ்ச்சி தரும்.
தனுசு
ஒரேயடியாய் நடக்காதோன்னு நீங்களா கற்பனை செய்துகிட்டு டென்ஷன் ஆனால் அதற்கு நான் பொறுப்பில்லை. மம்மிக்கு மருத்துவ செலவு வந்தால் பயப்படாதீங்க. சரியாயிடும். பிரச்சினை யாகாது. உத்யோகம் பற்றிக் கடந்த சில மாசங்களாக இருந்து வந்த டென்ஷன்களும் கவலைகளும் கிலேசங்களும் சங்சலங்களும் (வேறு ஏதாவது வார்த்தை விட்டுப்போயிருந்தால் இட்டு நிரப்பிக்குங்க) ஒட்டு மொத்தமாய் பை பை என்று சொல்லிவிட்டு ஓடும். பல காலமாய் நீங்கள் காத்திருந்த .. எதிர்பார்த்திருந்த .. சம்பள உயர்வா.. பதவி உயர்வா.. எல்லாமே ஓடி வந்து உங்கள் சோர்வைப் போக்கிப் புத்துணர்ச்சி அளிக்கும்.
மகரம்
மம்மிக்கு நிறைய நன்மைகள் லாபங்கள் எல்லாம் வரும். பல காலமாய் நீங்கள் நல்ல விஷயங்கள் எல்லாமே உங்களுக்குக் கிடைத்து உங்களுக்கு மன மகிழ்ச்சி அளிக்கும். அறுவை சிகிச்சை என்று தான் முதலில் சொல்வார்கள். நடுங்கிவிடாதீங்க. அப்படி எதுவும் நடக்காது. மருந்திலேயே சரி செய்வார்கள். பொறுமையாக இருங்கள். இனிதே திருமணம் முடியும். காதல் கைகூடும். புது வேலைக்கு முயற்சி செய்வதற்கு முன் ஜாதகப்படி நேரம் சரியாக இருக்கிறதா என்று பாருங்க. இல்லாட்டி சிலமாசங்கள் பொறுக்கத்தான் வேணும்.
கும்பம்
சண்டை சச்சரவுகள் வம்பு வழக்குகள் என்று எதிலும் தலையிட வேண்டாம். வாகனம் வாங்கும்போது அவசரப்படாமல் நிதானமாய் விசாரிச்ச வாங்குங்க. அருமையாய் அமையும். இனிதே திருமணம் முடியும். காதல் கைகூடும். புது வேலைக்கு முயற்சி செய்வதற்கு இது உகந்த் நேரம்தான். திடீர்னு நன்மைகள் அதிகமாகும். மாணவர்களுக்கு நன்மைகள் கூடுதலாகும். நண்பர்கள் கிட்ட ஒரு அளவோடு வெச்சுக்குங்க. இத்தனை காலமாய் மனசை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த விரக்தி மனப்பான்மை ஓடி ஓளியும். மனசில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
மீனம்
கலைத்துறையில் உள்ளவங்களுக்கு புது லாபம் கிடைக்கும். . மம்மிக்கு நிறைய நன்மைகள் லாபங்கள் எல்லாம் வரும். திடீர்னு நன்மைகள் அதிகமாகும். மாணவர்களுக்கு நன்மைகள் கூடுதலாகும். கணவன் மனைவிக்கிடையே பரஸ்பரம் நம்பிக்கை அதிகரிக்கும்படியாய்ப் பார்த்துக்குங்க. வெளிநாட்டு வேலை .. வெளிநாட்டு லாபம் என்று எதிர்பார்க்காததெல்லாம் வரும். குழந்தைகளின் மீது புகழ் வெளிச்சம் விழும். பெருமிதப்படுத்தும். நண்பர்கள் எல்லாம் நண்பர்கள் அல்ல என்றும் பகைவர்கள் எல்லாம் பகைவர்கள் அல்ல என்றும் புரிந்திருக்குமே?
சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 28 வரை