டில்லி:
டில்லியில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, ஆற்காடு முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன் ஆகியோர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அதிமுக.வில் ஏற்பட்டு வரும் குழப்பங்களை தொடர்ந்து பாஜக.வில் இணையும் படலம் தொடங்கியுள்ளது. இவர்களை தொடர்ந்து மேலும் பலர் இணைவார்கள் என்று பாஜ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel