சென்னை,
உச்ச நீதிமன்றத்தில், தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியதை தொடர்ந்து, தமிழத்தில் நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் அவசர சட்டத்து மத்திய அரசு அனுமதி அளிப்பதாக கூறியதை தொடர்ந்து, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து, மத்திய அரசின் 3 துறைகள் அனுமதி அளித்துள்ள நிலையில், இன்றைய சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையின்போது,
மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியதை தொடர்ந்து தமிழத்தில் நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், நீட் தேர்வு அடிப்படையிலேயே கலந்தாய்வு உடனே தொடங்க வேண்டும் என்றும், அதற்கான கால அவகாசம் செப்டம்பர் 4ந்தேதி வரை நீடித்தும் உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.
தமிழக அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து, சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கின் காரணமாக, ஏற்கனவே நடைபெற்ற விசாரணை யின்போது, மத்திய மாநில அரசுகள் நீட் தேர்வு காரணமாக பாதிக்கப்படும் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசு தனது நிலையை மாற்றிய தாலும், தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மாட்டோம் என்று பல்டி அடித்ததா லும், உச்சநீதி மன்றம் தமிழகத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளது.