வாஷிங்டன்:

மெரிக்காவில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் கடந்து செல்லும் போது சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படும். இதுவே சூரிய கிரகணம் எனப்படுகிறது.

இது நிகழும்போது, ஒரு நிமிடம், 36 விநாடிகளுக்கு பூமியில் இருள் சூழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

இதன்படி அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது. இந்திய நேரப்படி நேற்று இரவு சுமார் 10.20 க்கு இந்த சூரிய கிரகணம் தொடங்கியது.

அமெரிக்காவில் நிகழ்ந்த சூரிய கிரகணத்தை அந்நாட்டு மக்கள் கண்டுகளித்தனர். அதே நேரத்தில் அதிபர் டிரம்பும் தனது மனைவி மற்றும் மகளுடன் வெள்ளை மாளிகை மாடியில் இருந்து சூரிய கிரகணத்தை பார்த்தனர்.

இந்தியாவில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் இந்த கிரகணத்தின் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த வருடத்தில் இதற்கு முன்பு மூன்றுமுறை கிரகணம் ஏற்பட்டது. பிப்ரவரி 11 -ம் தேதி சந்திர கிரகணம்; பிப்ரவரி 26-ம் தேதி சூரிய கிரகணம்; ஆகஸ்ட் 7-ம் தேதி சந்திரகிரகணம். ஙஇதில் ஆகஸ்ட் 7- ம் தேதி ஏற்பட்ட சந்திர கிரகணத்தை மட்டுமே இந்தியாவில் காண முடிந்தது.

இந்நிலையில், நேற்று நடந்த கிரகணத்தின் வீடியோ ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாம் (நாசா ) வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவு பியட்ரிஸ் என்னும் இடத்தில் இருந்து சூரியன் முழுவதுமாக மறைந்த நிலையில் மிக துல்லியமாக எடுக்கப்பட்டதாகும்