அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். அணிகள் இன்று இணைந்துள்ளன. இந்த இணைப்பு முயற்சியில் பாஜகவின் கை இருப்பதாக பல நாட்களாகவே விமர்சனம் உள்ளது. இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது டில்லி சென்று மோடி மற்றும் முக்கிய பாஜக தலைவர்களை சந்தித்து வந்தது இந்த விமர்சனத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் இதை பாஜக தலைவர்கள் மறுத்து வந்தனர்.
இந்த சூழலில் இணைப்பில் பாஜகவின் கை இருப்பது குருமூர்த்தி மூலம் உறுதியாகி உள்ளது. துக்ளக் இதழின் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி, பாஜகவின் பத்திரிகை முகமாகப் பார்க்கப்படுகிறார். தீவிர பாஜக ஆதரவாளர் இவர்.
இன்று இவரை அ.தி.மு.கவின் அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பிறகு எடப்பாடி இல்லம் வந்து ஆலோசனை குறித்து எடப்பாடியிடம் தெரிவித்தனர்.